இலங்கையின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம்

Sri Lanka Department of Meteorology Weather
By Mayuri Jul 01, 2024 02:13 AM GMT
Mayuri

Mayuri

இலங்கையின் சில பகுதிகளில் இன்று (01) இடைக்கிடையே மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று சிறிதளவு மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் | Weather Sri Lanka Warning To People

காற்றின் வேகம்

அத்துடன் மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசக்கூடும்.

ஏனைய கடற் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 முதல் 35 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Gallery