காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

Sri Lanka Sri Lankan Peoples Weather
By Chandramathi Oct 13, 2023 03:15 AM GMT
Chandramathi

Chandramathi

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

இதற்கமைய மேல் மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்

காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு | Weather In Sri Lanka Today

மேலும் ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில்சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதுடன் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.