நாட்டில் இன்று பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

Sri Lanka Sri Lankan Peoples Climate Change Weather
By Shadhu Shanker Jul 09, 2024 12:44 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (09.07.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பலஇடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கொட்டித் தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கொட்டித் தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

விடுக்கப்பட்ட எச்சரிக்கை

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டில் இன்று பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை | Weather In Sri Lanka Heavy Rain Thunder Lightning

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

சாவச்சேரி ஆதார வைத்தியசாலை விவகாரம்: போராட்டத்தில் ஈடுபட்ட பெண் எழுப்பியுள்ள கேள்வி

சாவச்சேரி ஆதார வைத்தியசாலை விவகாரம்: போராட்டத்தில் ஈடுபட்ட பெண் எழுப்பியுள்ள கேள்வி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!