ஏப்ரல் 15 ஆம் திகதி வரை உச்சம் கொடுக்கும் சூரியன்
Sri Lanka
Weather
By Sachi
வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவலின் படி, இன்று முதல் ஏப்ரல் 15 ஆம் திகதி வரை சூரியன் இலங்கையின் அட்சரேகைகளுக்கு மேல் நேரடியாக இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று (05) தல்பே, வலிப்பிட்டிய மற்றும் திஹகொட ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.13 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்மலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுகாதார நடவடிக்கைகள்
இந்நிலையில் கடும் வெப்பமான காலநிலையைக் கருத்தில் கொண்டு சுகாதாரத் துறையினர் சுகாதார நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.