இன்று பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
மாணவர் ஒருவருக்கு காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய அனர்த்தம் காரணமாக பரீட்சை எழுத முடியாவிட்டால், அனர்த்த முகாமைத்துவ மையத்தின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அனர்த்த முகாமைத்துவ மையத்தின் அவசர தொலைபேசி எண் 117 அல்லது அனர்த்த முகாமைத்துவ மையத்தின் சிறப்பு கூட்டு அவசர நடவடிக்கை அறை எண்கள் 0113 668 020/ 0113 668 100/ 0113 668 013/ 0113 668 010 மற்றும் 076 3 117 117 என்ற எண்களில் அழைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திணைக்களத்திற்கு தேவையான வழிகாட்டுதல்கள்
மேலும், பரீட்சைத் திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கமான 1911 ஐத் தொடர்பு கொண்டு, தடைகளை விரைவில் அகற்றுவதற்குத் தேவையான ஒருங்கிணைப்பை ஏற்படுத்த முடியும் என்று அனர்த்த முகாமைத்துவ மையம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்துள்ளது.
கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சைகள் நடைபெறும் காலகட்டத்தில் எதிர்பாராத வானிலை காரணமாக ஏற்படக்கூடிய இடையூறுகளைத் தவிர்த்து, பரீட்சையை நடத்துவதற்கு அனர்த்த முகாமைத்துவ மையமும் பரீட்சைத் திணைக்களமும் விசேட கூட்டுத் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளன.
அதன்படி, இந்த ஆண்டு பரீட்சைக் காலத்தில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கும், பரீட்சைக் கடமைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கும் ஏற்படக்கூடிய இடையூறுகளையும் தவிர்க்க, அவசரகால பதில் ஒருங்கிணைப்பு பொறிமுறையை வலுப்படுத்த அனைத்து பங்குதாரர்களும் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகளை இந்தக் கூட்டுத் திட்டம் கோடிட்டுக் காட்டியுள்ளது.
மேலும் பரீட்சைக் காலத்தில் ஏற்படக்கூடிய ஏதேனும் இடையூறுகளை நிர்வகிக்க, பரீட்சைத் திணைக்களம், முப்படைகள், பொலிஸார் மற்றும் அனர்த்த முகாமைத்துவ செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள பிற அமைப்பினருடன் ஒருங்கிணைந்து, அனர்த்த முகாமைத்துவ மையம் ஏற்கனவே தொடர்புடைய திணைக்களத்திற்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதர பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்று(17.03.2025) ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |