நாட்டில் நிலவும் அவசர நிலைமை! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Kandy Sri Lanka Weather
By Fathima Dec 08, 2025 05:50 AM GMT
Fathima

Fathima

நிலவும் அவசர நிலைமை காரணமாக பல பகுதிகளுக்கு 3 ஆம் நிலை வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தில் வரக்காபொல, அரநாயக்க, கலிகமுவ, ரம்புக்கன, புலத்கொஹபிட்டிய, யட்டியந்தோட்டை, மாவனெல்ல மற்றும் கேகாலை ஆகிய பிரதேசங்களுக்கும் குருநாகல் மாவட்டத்தில், ரிதீகம, பொல்கஹவெல, மல்லவப்பிட்டிய, அலவ்வ மற்றும் மாவத்தகம ஆகிய பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை 

கண்டி மாவட்டத்தில், கங்கை இஹல கோரளை, தும்பனை, மெததும்பர, அக்குரணை, குண்டசாலை, உடுநுவர, தொழுவ, உடுதும்பர, பாதஹேவஹெட்ட, ஹரிஸ்பத்துவ, மினிபே, கங்கவட கோறளை, பஸ்பாகே கோரளை, பன்வில, ஹத்தரலுவ, யத்தறலுவ, பத்தரலுவ, பத்தறவ, தெல்தோட்டை, பூஜாபிட்டிய மற்றும் உடபலத ஆகிய பகுதிகளுக்கு வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் அவசர நிலைமை! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Weather Alert Sri Lanka Today

அதேநேரம் மாத்தளை மாவட்டத்தில், யடவத்த, மாத்தளை, அம்பங்கங்க கோரளே, பல்லேபொல, லக்கல பல்லேகம, ரத்தோட்ட, நாவுல, உக்குவெல மற்றும் வில்கமுவ ஆகிய பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளில் பொதுமக்கள் உடனடியாக வெளியேறவும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.