காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

Sri Lanka Sri Lankan Peoples Weather
By Chandramathi Nov 05, 2023 03:27 AM GMT
Chandramathi

Chandramathi

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

இதேவேளை வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பலத்த காற்று

மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேல், வடமத்திய மற்றும் தென் மாகாணங்களில்சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு | Weather Alert In Sri Lanka Today

மேலும் சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில்சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை கோரியுள்ளது.