நாட்டில் நிலவும் கடும் வெப்பம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Galle Matara Ratnapura Sri Lanka Department of Meteorology
By Benat Feb 21, 2025 06:41 AM GMT
Benat

Benat

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலையானது இன்றும் மனித உடலால் உணரப்படும் அளவை விட அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும், இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இந்த நிலைமை காணப்படும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

அதிக நீரை பருகுங்கள் 

நிலவும் வெப்பமான காலநிலையினால் பணியிடங்களில் உள்ளவர்கள் அதிகளவான நீரை பருக வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் கடும் வெப்பம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Weather Alert In Sri Lanka

மேலும், வீட்டில் தங்கியிருக்கும் முதியவர்கள் மற்றும் நோயாளிகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் சுகாதார அதிகாரிகள் கோரியுள்ளனர்.