வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை

Sri Lanka Weather
By Mayuri Aug 17, 2024 11:06 AM GMT
Mayuri

Mayuri

அடுத்த 24 மணிநேரத்திற்கான கனமழை மழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (17) பிற்பகல் 1 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு நாளை (18) பிற்பகல் 1 மணி வரை செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில பகுதிகளில் 150 மி.மீ அளவில் கனமழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதால் அது குறித்து அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை கோரியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை | Weather Alert In Sri Lanka

இதேவேளை, இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW