பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம்: சுமந்திரன் பகிரங்கம்

M A Sumanthiran ITAK General Election 2024 Parliament Election 2024
By Laksi Sep 30, 2024 04:00 PM GMT
Laksi

Laksi

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பங்காளி கட்சிகள் இணையாவிட்டால் தமிழரசு கட்சி தனியாக போட்டியிடும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று (30) மன்னாரில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சியின் சின்னத்தில் தமிழரசு கட்சியின் பெயரில் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கு அழைப்பை விடுத்திருந்தோம்.அப்படி அவர்கள் வரா விட்டால் இலங்கை தமிழரசு கட்சி ஆகிய நாங்கள் தனித்து போட்டியிடுவதாகவும் ஏற்கனவே தீர்மானம் எடுத்திருந்தோம்.

கற்பிட்டியில் நீரில் மூழ்கி மாணவன் பரிதாப மரணம்

கற்பிட்டியில் நீரில் மூழ்கி மாணவன் பரிதாப மரணம்

வாய்ப்பு

ஆகவே, நியமன பத்திரம் தாக்கல் செய்வதற்கு இன்னும் சிறிது காலமே இருப்பதால் அவர்களும் தங்கள் முடிவுகளை துரிதமாக தெரியப் படுத்துவதனால் வெகு விரைவில் அன்று நாங்கள் நியமித்த நியமன குழு கூடி அவர்கள் இணங்கி வரவில்லை என்றால் அவற்றை கருத்தில் எடுத்து தமிழரசு கட்சியின் வேட்பாளர்களை நாங்கள் தீர்மானிப்போம்.

பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம்: சுமந்திரன் பகிரங்கம் | We Will Contest Parliament Separately Sumanthiran

எதிர்வரும் தேர்தலில் இளைஞர்கள்,யுவதிகள்,ஆற்றல் உள்ளவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். 

ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்து மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி உற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில்லை என்ற தீர்மானத்தையும் மேற்கொண்டுள்ளோம் என  சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

காத்தான்குடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவன் உயிரிழப்பு

காத்தான்குடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவன் உயிரிழப்பு

பொதுத் தேர்தல்: மட்டக்களப்பில் செலுத்தப்பட்ட முதல் கட்டுப்பணம்

பொதுத் தேர்தல்: மட்டக்களப்பில் செலுத்தப்பட்ட முதல் கட்டுப்பணம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW