எம்.பியாக பதவியேற்ற அப்துல் வாஸித்!

Srilanka Muslim Congress Sri Lanka Politician Sri Lankan Peoples Political Development
By Rakshana MA Jul 08, 2025 10:47 AM GMT
Rakshana MA

Rakshana MA

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் (Mohamed Sheriff Abdul Wazeeth) சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் இன்று (08) பதவியேற்றார்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது சாலி நளீம் (Muhammathu Saali Naleem) பதவி விலகியதை தொடர்ந்து வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

முஹம்மது சாலி நளீம் ஏறாவூர் நகரசபையின் வேட்பாளராக போட்டியிடுவதற்காக, கட்சியின் வேண்டுகோளுக்கிணங்க நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியிருந்தார்.

திருகோணமலையில் சுற்றுலாப்பயணிகள் மீது கொடூர தாக்குதல்

திருகோணமலையில் சுற்றுலாப்பயணிகள் மீது கொடூர தாக்குதல்

நாடாளுமன்ற அமர்வு

காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 05.30 வரை நடைபெறவுள்ளது.

அதன்படி, காலை 09.30 முதல் 10.00 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22 (1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டது.

காலை 10.00 முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டடன் 11.00 முதல் 11.30 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டது.

காலை11.30 முதல் மாலை 5.00 வரை இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுவதற்கு ஒதுக்கப்பட்டது.

5.00 முதல் 5.30 வரை ஒத்திவைப்பு வேளையின் போதான ஆளுங்கட்சியின் பிரேரணைக்கு ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அகீகா- சட்டங்கள்

அகீகா- சட்டங்கள்

மட்டக்களப்பில் இளைஞனின் உயிரை பறித்த தொடருந்து!

மட்டக்களப்பில் இளைஞனின் உயிரை பறித்த தொடருந்து!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW