2025 முதல் நீர்க்கட்டண சூத்திரத்தை நடைமுறைப்படுத்த அனுமதி

Sri Lanka Cabinet Jeevan Thondaman
By Mayuri Jul 16, 2024 09:26 AM GMT

அடுத்த வருடம் முதல் நீர்க்கட்டணக் கொள்கை சூத்திரத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சர் ஜீவன் தொண்டமான் முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். 

2025 முதல் நீர்க்கட்டண சூத்திரத்தை நடைமுறைப்படுத்த அனுமதி | Waterbill Today In Sri Lanka

புதிய நீர்க் கட்டணக் கொள்கை மற்றும் சூத்திரம் 

சகல தரப்பினருடனும் கலந்துரையாடியதன் பின் புதிய நீர்க் கட்டணக் கொள்கை மற்றும் சூத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதனை அடுத்த வருடம் முதல் நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW