கம்பஹா மாவட்டத்தில் எட்டரை மணித்தியால நீர் வெட்டு!

Water Cut Water Board Water
By Fathima Jul 16, 2023 03:20 AM GMT
Fathima

Fathima

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில்  எட்டரை மணி நேரம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்றைய தினம் (16.07.2023) பேலியகொட, வத்தளை, ஜா-எல மற்றும் கட்டுநாயக்க - சீதுவ நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் எட்டரை மணித்தியால நீர் வெட்டு! | Water Cut In Parts Of Gampaha District Today

மேலும், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, கட்டான மற்றும் மினுவாங்கொட பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளுக்கும் கம்பஹா பிரதேச சபையின் ஒரு பகுதிக்கும் இந்த காலப்பகுதியில் நீர் விநியோகம் தடைப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்தின் அவசர பராமரிப்பு பணிகளுக்காக பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எட்டரை மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைப்பட்டதன் விளைவாகவே இந்த நீர்வெட்டு ஏற்பட்டுள்ளதாக NWSDB விளக்கமளித்துள்ளது.