கொழும்பில் பல பகுதிகளில் நீர் வெட்டு: தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை

Colombo Water Cut Water
By Fathima Sep 22, 2023 07:19 AM GMT
Fathima

Fathima

கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

நாளை (23.09.2023) மாலை 6.00 மணி முதல் நாளை மறுதினம் (24.09.2023) காலை 6.00 மணி வரை 12 மணிநேர நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர் விநியோகம் தடை

அதன்படி கொழும்பு 11, 12, 13, 14, மற்றும் 15 ஆகிய பகுதிகளிலேயே நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

கொழும்பில் பல பகுதிகளில் நீர் வெட்டு: தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை | Water Cut In Colombo Area

அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு நடைமுறைப்படவுள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

இதனால், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்துக்கு வருந்துவதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.