திருகோணமலை - கண்டி பிரதான வீதியில் நீர் வீண்விரயம்! அதிகாரிகள் அசமந்தம்
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் நீர் வழங்கல் பாவனையாளர் அலுவல்கள்
பிரிவுக்குட்பட்ட திருகோணமலை - கண்டி பிரதான வீதியில் குடிநீர் குழாய்
வெடித்து நான்கு வருடகாலமாக நீர் வீண் விரயமாகிக் கொண்டிருப்பதாக
அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய் - பேராற்றுவெளி பழைய பலநோக்கு கூட்டுறவு நிலையம் முன்னால் உள்ள பிரதான வீதியினூடாக செல்லும் பிரதான குழாய் நீர் வெடித்துள்ளதால் குடிநீர் வீண் விரயமாகி வருகின்றது.
மக்கள் கோரிக்கை
இவ்வாறு குழாய் குடிநீர் வடிக்காண்களில் வடிந்து ஓடிக்கொண்டிருக்கிறது.இவை தொடர்பாக கந்தளாய் நீர்ப்பாசன அலுவலகத்திற்கு பல முறை எழுத்து மூலம் அறிவித்தும் எந்த விதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை மக்கள் என தெரிவிக்கின்றனர்.
எனவே அதிகாரிகள் கூடிய விரைவில் நீர் வீணாகுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.