பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Sri Lanka Sri Lankan Peoples
By Fathima Dec 22, 2025 07:40 AM GMT
Fathima

Fathima

இணையம் வாயிலாக பொருட்களை விற்பனை செய்வதாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றும் நிதி மோசடிகள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) தெரிவித்துள்ளது.

நம்பகத்தன்மை

இணையத்தில் பொருட்களை வாங்குவதற்கு முன்னர், விற்பனையாளர்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துமாறும், அவர்கள் குறித்த சரியான தகவல்களைப் பெற்ற பின்னரே கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளுமாறும் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது.

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! | Warning To The Public About Online Shopping

பொருட்களை வாங்கும் போதும் அல்லது விற்கும் போதும் பொதுமக்கள் மிகவும் அவதானமாகவும் விழிப்புடனும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அண்மைக்காலமாக அனர்த்த நிவாரணங்கள் மற்றும் நிதி உதவிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி மேற்கொள்ளப்படும் புதிய வகை மோசடிகள் குறித்தும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.