3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை - தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்

Sri Lanka Sri Lankan Peoples Department of Meteorology Weather
By Fathima Sep 01, 2023 06:51 AM GMT
Fathima

Fathima

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நாட்டின் 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

பலத்த மழை

அதன்படி, களுத்துறை மாவட்டத்தின் மத்துகம, புளத்சிங்கள, இங்கிரிய ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, புலத்கொஹுபிட்டிய, யட்டியந்தோட்டை, தெஹியோவிட்ட மற்றும் ருவன்வெல்ல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இன்று இரவு 8 மணி வரை இந்த எச்சரிக்கை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை - தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் | Warning To People Due To Inclement Weather

அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்தின் அஹலியகொட மற்றும் குருவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் வாழும் மக்களும் மண்சரிவு, பாறைகள் சரிவு மற்றும் மண்சரிவுகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களிலும் இன்று(01.09.2023) 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.