பாடசாலை மாணவர்களின் பெற்றோருக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

Sajith Premadasa Sri Lanka Politician Sri Lanka Sri Lankan Schools School Children
By Mayuri Jul 13, 2024 02:28 AM GMT
Mayuri

Mayuri

பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் மதுபானம், போதைப்பொருள் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகாமல் அவற்றை தவிர்க்க வேண்டும், ஏனெனில் பிள்ளைகள் பெற்றோரை பின்பற்றுகிறார்கள் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அறிவுறுத்தியுள்ளார். 

கொழும்பு, திம்பிரிகஸ்யாய, சசுமயவர்தன மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

நடுநிலை சிந்தனை

இது தொடர்பில் மேலும் கூறுகையில், சகல பாடசாலை மாணவர்களும் போதைப்பொருளுக்கு அடிமையாகாது நடுநிலை சிந்தனையோடு செயற்பட வேண்டும். நேரிய சிந்தனையோடு பாடசாலை பிள்ளைகள் வளர வேண்டும்.

மதுபானம், போதைப்பொருள் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகக் கூடாது. மது பழக்கம் ஒரு நாகரீகமற்ற செயல்.

பாடசாலை மாணவர்களின் பெற்றோருக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் | Warning To Parents Of School Students

இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி நடந்துகொள்ள வேண்டும். சரியானதைச் செய்து சரியான பாதையில் செல்ல வேண்டும். பெரியவர்களை மதிக்க வேண்டும். பணிவாக நடந்து கொள்ள வேண்டும்.

ஸ்மார்ட் கல்வி

தகவல் தொழில்நுட்பத்துறையில் பிரவேசித்து ஸ்மார்ட் கல்வியை முன்னெடுக்க வேண்டும். கல்வி எனும் பெறுமதிமிக்க வளத்தை எவராலும் ஒருபோதும் திருட முடியாது.

பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியையும் நல்ல நாகரீக வாழ்க்கையும் அமைத்துக் கொடுக்க சகலரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

இன்று மக்கள் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், வருமானம் ஈட்டும் வழிகளிலும் மீளமுடியாத வகையில் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். கஷ்டங்கள் நிறைந்த பெரும் அழுத்தங்களுக்கு மத்தியில் ஜீவித்து வருகின்றனர். நகர்ப்புற வறுமை கூட வியாபித்துள்ளது.

இதனால் சமூக விரோத நடவடிக்கைகள் கூட இன்று சமூகத்தில் இடம்பெற்று வருகிறது என குறிப்பிட்டுள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW