உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் வரி செலுத்துவோருக்கு விடுத்துள்ள எச்சரிக்கை
வணிக உரிமையாளர்களிடம் இருந்து வரி வசூலிப்பதற்காக உள்நாட்டு இறைவரி அதிகாரிகளைப் போல் போலி வேடமிட்டு மோசடியில் ஈடுபடுவது குறித்து உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் வரி செலுத்துவோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அனைத்து வரி அறவீடுகளும் சட்ட வழிகள் மூலம் நடத்தப்படும் என்றும், எந்தவொரு நடவடிக்கைக்கும் முன்னர் உத்தியோகபூர்வ எழுத்துப்பூர்வ அறிவிப்புகள் வழங்கப்படும் என்று ஆணையாளர் நாயகம் தெளிவுபடுத்தியுள்ளார்.
மோசடி நடவடிக்கை
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) இந்த மோசடி நடவடிக்கை குறித்து இலங்கை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளதோடு உடனடி சட்ட நடவடிக்கையையும் வலியுறுத்தியுள்ளது.
IRD சார்பாக வரிகளை வசூலிப்பதாகக் கூறி எவருக்கும் பணம் வழங்க வேண்டாம் என வரி செலுத்துவோர் அறிவுறுத்தப்படுகிறார்கள், மேலும் ஏதேனும் தகவல்கள் இருந்தால் அதிகாரப்பூர்வ IRD அலுவலகங்களுக்கு அறிவிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |