வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளில் மின்சார பயன்பாடு குறித்து எச்சரிக்கை!
Sri Lanka
Climate Change
Weather
By Fathima
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளில் மின்சாரத்தை பயன்படுத்தும்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
சீரற்ற வானிலை
இதற்கிடையில், முப்படைகளைச் சேர்ந்த 38,800 பணியாளர்கள் தொடர்ந்து வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபடுவார்கள் என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், சீரற்ற வானிலையால் சேதமடைந்த 185க்கும் மேற்பட்ட வீதிகள் போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
அத்துடன், சேதமடைந்த பாலங்களுக்காக 7 தற்காலிக பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் விமல் கண்டம்பி தெரிவித்துள்ளார்.