இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Sri Lankan Peoples Tourism Israel
By Rakshana MA Mar 24, 2025 10:02 AM GMT
Rakshana MA

Rakshana MA

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களில், ஏதிலிகள் விசா வைத்திருப்பவர்களுக்கு நாட்டில் வேலை செய்வதற்காக சட்டப்பூர்வ விசாக்களை வழங்குவதாக தெரிவித்து பணம் மோசடியில் ஈடுபடும் ஒரு குழு குறித்து தகவல் கிடைத்துள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

அத்தகைய திட்டம் எதுவும் செயல்பாட்டில் இல்லை எனவும், இதுபோன்ற பொய்யான வாக்குறுதிகளை நம்பி பணம் மோசடி செய்பவர்களிடம் ஏமாற வேண்டாம் எனவும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டார மக்களை வலியுறுத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றச்சாட்டப்பட்ட இப்ராஹிமுக்கு விசாரணை ஒத்திவைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றச்சாட்டப்பட்ட இப்ராஹிமுக்கு விசாரணை ஒத்திவைப்பு

எச்சரிக்கை

இக்குழுவினர் சில தனிநபர்களிடம் 1.5 மில்லியன் செலுத்துமாறும், அதில் ஒரு பகுதியை முன்பணமாக வழங்குமாறும் கேட்கப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Warning Issued To Sri Lankans In Israel

அதன்படி, இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் இஸ்ரேல் அரசாங்கம் இதுபோன்ற எந்தவொரு விசா வழங்கும் செயல்முறையிலும் ஈடுபடவில்லை என இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.

காரைதீவில் தேர்தல் வியாபாரிகளுக்கு இடமில்லை

காரைதீவில் தேர்தல் வியாபாரிகளுக்கு இடமில்லை

அரசாங்கத்திடம் உள்ள உரமானியங்களின் கையிருப்பு : வெளியான மகிழ்ச்சி தகவல்

அரசாங்கத்திடம் உள்ள உரமானியங்களின் கையிருப்பு : வெளியான மகிழ்ச்சி தகவல்

         நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW