கடும் மின்னல் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

By Fathima Nov 20, 2025 10:30 AM GMT
Fathima

Fathima

கடும் மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் இடியுடன் கூடிய மழையுடன் கடும் மின்னல் ஏற்படக்கூடிய அதிக சாத்தியம் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவுறுத்தல்

இந்த அறிக்கை இன்று (20) இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.  

கடும் மின்னல் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Warning Issued Regarding Severe Lightning

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.