பொது பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான புதிய விசாரணைகளைத் தடுக்கும் முயற்சிகள் மூலம் நாட்டை ஸ்திரமின்மைக்கு ஆளாக்க யாருக்கும் அனுமதி அளிக்கப்படாது பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் டி.டிபிள்யூ.ஆர்.டி.செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்த சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய செனவிரத்ன, நடந்து வரும் விசாரணையிலிருந்து விசாரணைக்கான புதிய வழிகள் உருவாகியுள்ளன என்று குறிப்பிட்டுளளார்.
சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்
விசாரணைகளை சீர்குலைக்க சில குழுக்கள் மேற்கொண்ட முயற்சிகளை புலனாய்வு அமைப்புகள் அடையாளம் கண்டுள்ளன.
இந்த விடயத்தில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இந்த நபர்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.
மேலும் அவர்களுக்கு எதிராக சட்டம் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
விசாரணைகளைத் தடுக்கும் முயற்சிகள் மூலம் நாட்டை ஸ்திரமின்மைக்கு ஆளாக்க யாருக்கும் அனுமதி அளிக்கப்படாது என்றும் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |