குடிநீர் தொடர்பில் மக்களுக்கு விசேட அறிவிப்பு

Sri Lankan Peoples Dengue Prevalence in Sri Lanka Weather Floods In Sri Lanka
By Fathima Dec 01, 2025 05:16 AM GMT
Fathima

Fathima

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிணற்று நீரைக் குடிப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் என பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குட கூறியுள்ளார்.  

பெரும் அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் கூறினார்.

விசேட அறிவிப்பு

வயிற்றுப்போக்கு போன்ற நிலைமைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதால், முடிந்தவரை கொதிக்க வைத்த தண்ணீரைக் குடிக்குமாறும் அவர் மக்களுக்கு அறிவுறுத்தினார்.

குடிநீர் தொடர்பில் மக்களுக்கு விசேட அறிவிப்பு | Warning For The People About Drinking Water

மேலும் சிறு குழந்தைகளுக்கும் கொதிக்க வைத்த தண்ணீரை மட்டுமே குடிக்கக் கொடுக்க வேண்டும் என அவர் கூறினார்.

தற்போதைய பேரிடர் சூழ்நிலையில் வீடுகளைச் சுற்றி நுளம்புகள் பெருகும் இடங்கள் இருக்கலாம் என்பதால், அவற்றை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

இல்லையெனில், டெங்கு மற்றும் சிக்குன்யா நோய்கள் பரவும் அபாயம் அதிகம் என்று சமில் முத்துக்குட மேலும் தெரிவித்துள்ளார்.