இலங்கை மக்களுக்கு சுகாதார பிரிவினர் விடுத்துள்ள எச்சரிக்கை
தற்போது பரவி வரும் இன்புளுவன்சா போன்ற வைரஸ் நோய்களுக்கு மருத்துவ ஆலோசனையின்றி நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பெற்றுக் கொள்ளக் கூடாது என சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
நீண்ட நாட்களாக காய்ச்சல் இருந்தால் அரச வைத்தியசாலைக்கு சென்று வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு போதனா வைத்தியசாலையின் உடலியல் நிபுணர் நந்தன திக்மதுகொட தெரிவித்தார்.
இந்த வைரஸ் நோய் காற்றில் வேகமாகப் பரவுவதால், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முகக் கவசம் அணியும் சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது
இதன் மூலம் அந்த பாதிப்பில் இருந்து அதிலிருந்து தற்காத்துக் கொள்வது அவசியம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.