உள்நாட்டு இறைவரித் திணைக்களம் பொது மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை
தனிநபர்கள் வரி அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்யும் மோசடி நடவடிக்கைகள் அதிகரித்து வருவது குறித்து உள்நாட்டு இறைவரித் வரித் திணைக்களம் (Inland Revenue Department ) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பு, பாணந்துறை, நீர்கொழும்பு, வென்னப்புவ மற்றும் மினுவாங்கொடை உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் இந்த மோசடிகள் பதிவாகியுள்ளன.
பொதுமக்களிடம் வலியுறுத்து
இந்தநிலையில், உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் என்ற பெயரில் இலங்கை வங்கி அல்லது மக்கள் வங்கியின் கணக்குகளில் நேரடியாக பணம் செலுத்துமாறு வரி செலுத்துவோருக்கு ஆலோசனை வழங்குவதற்கு மட்டுமே சட்டபூர்வமான உள்நாட்டு இறைவரி அதிகாரிகள், பொதுமக்கள் மத்தியில் வருகை தருவார்கள் என்றும், அவர்கள் ஒருபோதும் பணத்தையோ காசோலைகளையோ சேகரிக்க மாட்டார்கள் என்றும் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
எனவே வரி அதிகாரி என்று கூறிக்கொண்டு பணம் அல்லது காசோலைகளை கோரினால், தயவு செய்து இணங்க வேண்டாம், அதற்கு பதிலாக, உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு சம்பவம் குறித்து முறையிடுமாறும், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |