யுத்தகுற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டவை: சரத்பொன்சேகா

Sarath Fonseka
By Mayuri Jul 16, 2024 07:28 AM GMT
Mayuri

Mayuri

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின்போது யுத்தகுற்றங்கள் இழைக்கப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டவை என முன்னாள் இராணுவதளபதியும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்றால் அவர்களின் மனித எச்சங்கள் எலும்புக்கூடுகள் எங்கே எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தத்தின் பின்னர் சில சம்பவங்கள் இடம்பெற்றதை நிராகரிக்காத அவர் ஒரு சம்பவம் குறித்து நான் விசாரணையை ஆரம்பித்தேன் எனினும் பதவியிலிருந்து நீக்கப்பட்டேன் விசாரணையை தொடரமுடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

யுத்தகுற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டவை: சரத்பொன்சேகா | War Allegations Exaggerated Sarath Fonseka

இலட்சக்கணக்கானோர் உயிர்தப்பினர்

இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் இறுதியுத்தத்தின்போது உயிர்தப்பினார்கள். அவர்களை நான் பாதுகாப்பாக வெளியேற்றினேன். முதலில் 2009 மே 19ம் திகதி வெள்ளமுள்ளிவாய்க்காலில் இருந்து 150,000 பேரை மீட்டேன், யுத்தம் முடிவடைவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் 85000 பேரை மீட்டேன். நாங்கள் பொதுமக்களின் உயிரிழப்புகள் அதிகரிப்பதை தவிர்த்தோம்.

நாங்கள் கனரக ஆயுதங்களை ஆட்டிலறிகள் போன்றவற்றை மிகவும் கட்டுப்பாட்டுடன் பயன்படுத்தினோம், குறிப்பாக 2009ம் ஆண்டின் ஐந்து மாதங்களில் அவ்வாறே போரிட்டோம். 2008ம் ஆண்டு முழுவதும் நான் 2000 படையினரை இழந்தேன்.

ஆனால் 2009 இன் நான்கரை மாதங்களில் கட்டுப்பாட்டுடன் தாக்குதலை மேற்கொண்டதால் நான் 2000 படையினரை இழந்தேன். அவர்கள் அந்த சிறிய பகுதிக்குள் முற்றுகையிடபட்டிருந்தார்கள். எங்களால் ஒரு மாதத்திற்குள் அவர்களை முடித்திருக்கலாம்.

யுத்தகுற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டவை: சரத்பொன்சேகா | War Allegations Exaggerated Sarath Fonseka

கண்மூடித்தனமாக பொதுமக்கள் உட்பட அனைவரின் மீதும் தாக்குதலை மேற்கொண்டிருந்தால் ஒருமாதத்திற்குள் அவர்களை முடித்திருக்கலாம். ஆனால் நாங்கள் அதனை செய்யவில்லை நாங்கள் கட்டுப்பாட்டுடன் தாக்குதலை மேற்கொண்டோம்.

நிச்சயமாக இந்த உயிரிழப்புகள் குறித்த புள்ளிவிபரங்கள் யுத்த குற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டவை. இந்த தகவல்கள் உண்மையென்றால் நீங்கள் அந்த பகுதியில் எங்கு சென்றாலும் மனித புதைகுழிகளை பார்க்க முடியாதாகயிருக்கவேண்டும் ஆனால் அவ்வாறான ஒரு சூழ்நிலை இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW