தேர்தலில் வாக்களிப்பது நமது கடமை : எஸ்.எம். சபீஸ் தெரிவிப்பு

Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Presidential Election 2024
By Rukshy Aug 04, 2024 07:12 AM GMT
Rukshy

Rukshy

எமது வாக்கு நமது உரிமை என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது ஆனால் இம்முறை வருகின்ற தேர்தலில் எமது வாக்குரிமையை நமது கடமையாக நினைத்து வாக்களிக்க வேண்டிய நேரம் வருகின்றது என்று அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், கிழக்கின் கேடயத்தின் தலைவருமான எஸ்.எம் சபீஸ் தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அம்பாறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு : நால்வர் உயிரிழப்பு

அம்பாறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு : நால்வர் உயிரிழப்பு

சூறையாடிய அரசியல்வாதிகள்

மேலும் தெரிவிக்கையில், ”தலைவன் சரியில்லை என்றால் அந்த சமூகமும் நாடும் சீரழிந்து விடும் என்பதற்கு எமது நாடு உலகிற்கு சிறந்த உதாரணமாகும்.

தேர்தலில் வாக்களிப்பது நமது கடமை : எஸ்.எம். சபீஸ் தெரிவிப்பு | Voting Is Our Duty Sabeesh

அதனால் சிறந்த சிந்தனையால் மக்களை சிறப்பாக வாழ வைக்கக்கூடிய நல்லொழுக்கம் உடைய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான உரிய நேரம் நெருங்கி வந்துள்ளது.

அத்தோடு தனக்கு வாக்களித்த மக்களை மறந்து நாட்டை சூறையாடிய அரசியல்வாதிகளை சமூகத்தில் இருந்து ஒதுக்குவதற்குரிய நேரம் நெருங்குகிறது.

மேலும், எமது சந்ததிகளின் எதிர்காலத்துக்காக கடமை உணர்வுடன் மக்கள் வாக்களிக்க தயாராக இருக்க வேண்டும் என்றும்“ எஸ்.எம் சபீஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

தபால்மூல வாக்காளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

தபால்மூல வாக்காளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

குவைட்டில் கைதான இலங்கை கலைஞர்கள் உள்ளிட்டவர்கள் விடுதலை

குவைட்டில் கைதான இலங்கை கலைஞர்கள் உள்ளிட்டவர்கள் விடுதலை

]

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW