வாக்காளர்கள் அட்டை விநியோகிக்கும் பணிகள் குறித்து வெளியான தகவல்

Sri Lanka Election Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 07, 2024 06:07 AM GMT
Laksi

Laksi

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டையை விநியோகிப்பதற்கான விசேட தினமாக நாளைய தினம் (8) நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை கொழும்பில் நேற்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித கே. ரணசிங்க  தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் 11,12,13 மற்றும் 14 ஆம் திகதிகளிலும் வாக்காளர் அட்டை விநியோகிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் சஜித்தை ஆதரித்தமைக்கு ஹக்கீமின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு

ஜனாதிபதித் தேர்தலில் சஜித்தை ஆதரித்தமைக்கு ஹக்கீமின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு

வாக்காளர் அட்டை

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை விநியோகிப்பதற்கான விசேட தினமாக நாளைய தினத்தை அறிவித்து அந்தப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர்கள் அட்டை விநியோகிக்கும் பணிகள் குறித்து வெளியான தகவல் | Voter Card Distribution Sl Presidential Election

இதன்படி, நாளை காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரையில் இந்தப் பணிகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முட்டை இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு

முட்டை இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு

பணிகள் நிறுத்தம்

மேலும், எதிர்வரும் 14 ஆம் திகதிக்குப் பின்னர் வீடுகளுக்குச் சென்று வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் நிறுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்காளர்கள் அட்டை விநியோகிக்கும் பணிகள் குறித்து வெளியான தகவல் | Voter Card Distribution Sl Presidential Election

குறித்த தினங்களில் வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ளாதவர்கள் எதிர்வரும் 18,19 மற்றும் 20ஆம் திகதிகளில் தங்களது பகுதிகளுக்குப் பொறுப்பான அஞ்சல் அலுவலகத்துக்குச் சென்று தங்களது அடையாள அட்டையைக் காண்பித்து வாக்காளர் அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியும் என பிரதி அஞ்சல் மா அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இயற்கை எரிவாயு விலையில் பதிவான மாற்றம்

இயற்கை எரிவாயு விலையில் பதிவான மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW