இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை

India
By Fathima Apr 05, 2023 11:47 PM GMT

கடந்த நாட்களில் இந்தியாவில் நடத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு உலக இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.

தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் அவ்வமைப்பு இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ராம நவமி ஊர்வலத்தின் போது இந்தியாவின் பல மாநிலங்களில் முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட வன்முறை செயல்களை இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) தலைமைச் செயலகம் கண்டிக்கிறது.

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை | Violence Against Muslims In India

இஸ்லாமிய சமூகத்தின் மீதான வெறுப்பு

இவை இந்தியாவில் இஸ்லாமிய சமூகத்தின் மீதான வெறுப்பின் வெளிப்பாடாக இதை பார்க்கின்றோம்.

இதுபோன்ற வன்செயல்களைத் தூண்டுபவர்களுக்கும் அதில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கும் எதிராக உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இதேவேளை நாட்டில் உள்ள முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு,உரிமைகள் மற்றும் கண்ணியத்தை உறுதிப்படுத்தவும், இந்திய அதிகாரிகளை OIC தலைமைச் செயலகம் கேட்டுக்கொள்கிறது.