உலங்கு வானூர்திகள் பயன்பாடு தொடர்பில் விஜித ஹேரத்தின் அறிவிப்பு
தற்போதுள்ள அரசாங்கமானது தேவை ஏற்பட்டால் உலங்கு வானூர்திகளில் பயணம் செய்ய நேரிடும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
உலங்கு வானூர்திகளைப் பயன்படுத்தப்போவதில்லை என நாங்கள் கூறவில்லை எனவும் அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலங்கு வானூர்திகளின் பயன்பாடு
மேலும் தெரிவிக்கையில், எதிர்க்கட்சியில் இருந்தபோது வெள்ளம் மற்றும் சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்களின் போது உலங்கு வானூர்திகளை பயன்படுத்தி பயணம் செய்துள்ளோம்.
கடந்த அரசாங்கங்களில் ஜனாதிபதி, ஆலோசகர்கள் மற்றும் பாதுகாப்புப் பிரதானிகள் தனித்தனி உலங்குவானூர்திகளை பயன்படுத்தியுள்ளனர்.
தங்களது அரசாங்கத்தில் எவரும் இவ்வாறு உலங்கு வானூர்திகளை பயன்படுத்தியது கிடையாது எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கருத்து வெளியிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |