இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி
இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக அதிகரித்த தங்கத்தின் விலையானது இன்று குறைவடைந்துள்ளது.
அதன்படி, இன்றைய தினம் (12.11.2024) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 769,687 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்றைய நிலவரம்
24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 27,150 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 217,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 24,890 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 199,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 23,760 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams)190,050 ரூபாவாக இன்றையதினம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |