இலங்கையில் அதிக வெப்பமான வானிலை: முக்கிய அறிவுறுத்தல்

Sri Lanka Sri Lankan Peoples Water
By Mayuri Mar 23, 2026 06:06 AM GMT
Mayuri

Mayuri

தற்போது நிலவும் அதிக வெப்பமான வானிலை காரணமாக நீரிழப்பு ஏற்பட்டு இதயம் மற்றும் மூளை பாதிக்கப்பட்டு வலிப்பு, மயக்கம் அல்லது மரணம் கூட நிகழலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், பிள்ளைகளை நீரிழப்பில் இருந்து பாதுகாப்பதில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர். 

அதிரடி மாற்றம் காணும் தங்கத்தின் விலை: எதிர்பாராத அளவு வீழ்ச்சி - நகை வாங்கவுள்ளவர்களுக்கான செய்தி

அதிரடி மாற்றம் காணும் தங்கத்தின் விலை: எதிர்பாராத அளவு வீழ்ச்சி - நகை வாங்கவுள்ளவர்களுக்கான செய்தி

இது தொடர்பில் கொழும்பு ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா கூறுகையில்,

பிள்ளைகளுக்கு அதிகளவு நீர் மற்றும் இயற்கையான திரவ உணவுகளை வழங்க வேண்டும். பிள்ளைகளுக்கு அதிக தூக்கம், உணவில் விருப்பமின்மை, உடல் வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அவர்களுக்கு மேலதிகமாக நீர் மற்றும் திரவ உணவுகளை வழங்க வேண்டும்.

கொழும்பில் மறு அறிவிப்பு வரும் நடைமுறைக்கு வந்த திட்டம்: இன்று வெளிவந்துள்ள புதிய முடிவு

கொழும்பில் மறு அறிவிப்பு வரும் நடைமுறைக்கு வந்த திட்டம்: இன்று வெளிவந்துள்ள புதிய முடிவு

நோய்களில் இருந்து பாதுகாப்பு

இந்த வெப்பமான சூழலில் தேமல், சொறி போன்ற தோல் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால், பிள்ளைகளை ஒரு நாளைக்கு இரு முறையாவது குளிப்பாட்ட  வேண்டும். பயமின்றி சுமார் 20 நிமிடங்கள் வரை அவர்களை நீரில் இருக்கச் செய்வதன் மூலம் தோல் நோய்களிலிருந்து பாதுகாக்க முடியும்.

இலங்கையில் அதிக வெப்பமான வானிலை: முக்கிய அறிவுறுத்தல் | Very Hot Weather In Sri Lanka Drink Water

பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஓட்டப்பந்தயங்களில் ஈடுபடும் மாணவர்கள் போதியளவு நீர் பருகாவிட்டால், நீரிழப்பு நிலை ஏற்படுவதுடன் 'வெப்ப அதிர்ச்சி' நிலைக்கும் உள்ளாகலாம்.

எனவே இது குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு என சுட்டிக்காட்டியுள்ளார். 

காலை பிடித்த மகள்...யாழ்.விரிவுரையாளர் கொலையில் மருமகனின் பகீர் வாக்குமூலம்

காலை பிடித்த மகள்...யாழ்.விரிவுரையாளர் கொலையில் மருமகனின் பகீர் வாக்குமூலம்