நாட்டில் மிகவும் ஆபத்தான சூழ்நிலை

Sri Lanka
By Nafeel May 12, 2023 01:46 AM GMT
Nafeel

Nafeel

நாட்டில் மிகவும் ஆபத்தான சூழ்நிலை உருவாகி வருவதாகவும், நேற்றைய தினம் நிகேஷல மீது கடுவலை முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்னவினால் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலுடன் சேர்ந்து தாக்குதலைநடத்தியாதவும்,

குறித்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தாக்கியவர்கள் என இரு தரப்பினரும் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பெயர் பட்டியல் சமூக வலைதளங்களில் பகிரப்படுவதாகவும், அவர்களை கவனமாக இருக்குமாறு பல்வேறு அச்சுறுத்தல் ரீதியிலான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சகலரும் தாக்குதல்களுக்கும், உயிர் அச்சுறுத்தலுக்கும் ஆளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், இப்போராட்டத்தின் பக்கவிளைவுகளின் பயனாகவே தற்போதைய ஜனாதிபதியும் பதவிக்கு வந்துள்ளதால் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்களின் ஒரு பகுதியே நேற்றைய தாக்குதலுமாகும் என அவர் தெரிவித்தார்.

எனவே, அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் தலையிட வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று(11) இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.