ஞானசார தேரருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
Sri Lanka Police
Sri Lankan Peoples
Galagoda Aththe Gnanasara Thero
By Rakshana MA
இஸ்லாம் மதத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைதான பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை(Galagoda Aththe Gnanasara) விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து 9 மாதங்கள் சிறைத்தண்டனைக்கு பிறகு இன்று (25) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பிணையில் விடுதலையான தேரர்
இவர் வெலிக்கடை சிறைச்சாலையின் சாதாரண கைதிகளுடன் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ள நிலையில் தம்மை பிணையில் விடுவிக்குமாறு கோரி ஞானசார தேரர் சமர்ப்பித்த சீராய்வு மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |