மோட்டார் போக்குவரத்து திணைக்களம் கட்டாயமாக்கியுள்ள புதிய விதி!

Sri Lankan Peoples vehicle imports sri lanka Value Added Tax​ (VAT)
By Fathima Jan 12, 2026 05:53 AM GMT
Fathima

Fathima

அனைத்து வாகன பதிவுகள் மற்றும் உரிமைப் பரிமாற்றங்களுக்கும் வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN) சேர்ப்பதை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் கட்டாயமாக்கியுள்ளது.

மோட்டார் சைக்கிள்கள், கை டிராக்டர்கள், டிராக்டர்கள், டிராக்டர் டிரெய்லர்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் தவிர அனைத்து வாகனங்களுக்கும் இந்தத் தேவை பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விதி

இந்த புதிய விதி, 2026 ஜனவரி 5ஆம் திகதி முதல் நடைமுறைக்குவரவுள்ளது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் கட்டாயமாக்கியுள்ள புதிய விதி! | Vehicle Registration Rule In Sri Lanka

புதிய விதியின் கீழ், புதிய உரிமையாளரின் தேசிய அடையாள அட்டை எண்ணுடன் TIN உள்ளிடப்பட வேண்டும், அல்லது வணிகங்களைப் பொறுத்தவரை, வணிகப் பதிவு எண்ணை உள்ளிட வேண்டும் என்று மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

சில மோட்டார் போக்குவரத்து சேவைகளுக்கு TIN தேவை என்பது முதன்முதலில் 2025 ஏப்ரல் 15 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

எனினும் புதுப்பிக்கப்பட்ட Nuavu தரவுத்தளத்தின் முழுமை அமுலாக்கம் 2026 ஜனவரி 5 ஆம் திகதியன்று ஆரம்பித்துள்ளது.