வாகன வருமான அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
மேல் மாகாணத்தில் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் வழங்கும் அனைத்து பிரிவுகளும் எதிர்வரும் 20 ஆம் திகதி மூடப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை மேல் மாகாண சபை (Western Provincial Councils) தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான கடமைகளுக்காக உத்தியோகத்தர்கள் விடுவிக்கப்பட வேண்டியிருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அலுவலகம் தெரிவித்துள்ளது.
வாகன வருமானவரி
இதனடிப்படையில், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் பெற வேண்டிய வாகனங்களுக்கு அபராதமின்றி உரிமம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இணையவழி முறையின் மூலம் வருமான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் மேல்மாகாண பிரதம செயலகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |