சமூக ஊடகங்களில் சேறு பூசுவதை நிறுத்துவதற்கான விரிவான வேலைத்திட்டம்

By Mayuri Sep 15, 2024 05:31 AM GMT
Mayuri

Mayuri

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் முடிவடைந்த பின்னர் 48 மணித்தியாலங்கள் அமைதியான காலப்பகுதியில் வேட்பாளர் பிரசாரம் மற்றும் சமூக ஊடகங்களில் சேறு பூசுவதை நிறுத்துவதற்கான விரிவான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு மற்றும் சமூக ஊடக வலையமைப்பைச் சேர்ந்த நிறுவனங்களுடன் இணைந்து இந்தத் திட்டத்தை தயாரிப்பதில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் எதிர்வரும் 18ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைவதோடு, 19ஆம் மற்றும் 20ஆம் திகதிகளில் அமைதியான காலகட்டமாக இருக்கும்.

சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரசாரம்

இந்த காலப்பகுதியில் பிரச்சாரம் செய்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ள போதிலும் சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமூக ஊடகங்களில் சேறு பூசுவதை நிறுத்துவதற்கான விரிவான வேலைத்திட்டம் | Election In Sri Lanka

சமூக ஊடக குழுக்களுடன் கலந்தாலோசித்த பின்னர் மௌன காலத்தில் தேர்தல் பிரசாரம் மற்றும் அவதூறு பரப்புரைகளை நிறுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீவிர முயற்சிகளை மேற்கொள்ளும் என ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW