நாட்டிற்கு கொண்டு வர அனுமதிக்கப்படும் வாகனங்கள் தொடர்பில் வெளியான புதிய செய்தி
பொதுத் தேவைகளைத் தவிர வேறு எந்த வாகனங்களையும் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
யட்டியந்தோட்டை மலல்பொல பிரதேசத்தில் நேற்று (30.08.2023) மாலை இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அனுமதி வழங்கப்பட்டுள்ள வாகனங்கள்
மேலும் தெரிவிக்கையில், வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதன் பின்னர் விசேட தேவைகளுக்காக மாத்திரம் 6,900 வாகனங்களை நாட்டிற்கு கொண்டு வர அனுமதிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் 3,000 வாகனங்கள் பொலிஸ் திணைக்களத்திற்கு கொண்டுவரப்பட்ட முச்சக்கரவண்டிகள் மற்றும் ஜீப்கள்.
நோயாளர்காவு வண்டிகள், பொதுத் திட்டங்களுக்குத் தேவையான வாகனங்கள், தூதரகங்களுக்குத் தேவையான வாகனங்கள் போன்ற பொதுத் தேவைகளைத் தவிர வேறு எந்த வாகனங்களையும் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படவில்லை.
வாகன உதிரி பாகங்கள்
இதேவேளை, எதிர்காலத்தில் இறக்குமதி தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் வாகன உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதற்கான தடை முற்றாக நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.