வாகன இறக்குமதிக்கான கடிதம் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்

Sri Lanka Sri Lankan Peoples Japan vehicle imports sri lanka Import
By Rakshana MA Feb 17, 2025 11:50 AM GMT
Rakshana MA

Rakshana MA

வாகனங்களை இறக்குமதி செய்யும் போது இலங்கை வங்கிகளிடமிருந்து கடன் கடிதங்களை ஜப்பானிய வங்கிகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று வெளியான தகவலில் எந்த உண்மையும் இல்லை என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானேஜ்(Prasath Manoj) தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு(sri lanka) வாகனங்களுடன் வரும் கப்பல் பெப்ரவரி 13ஆம் திகதி ஜப்பானில் இருந்து புறப்பட்டுள்ளது.

அந்தக் கப்பல் விரைவில் ஹம்பாந்தோட்டை(hampantota) துறைமுகத்தை வந்தடையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

உரமானியத்திற்கான நிதி தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

உரமானியத்திற்கான நிதி தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

இறக்குமதிக்கான தடைகள் இல்லை 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முந்தைய அரசாங்கத்தின் போது எழுந்த பிரச்சினைகள் காரணமாகவும், அப்போதைய அரசாங்கத்தின் தலையீட்டால் கடன் கடிதங்கள் இரத்து செய்யப்பட்டதாலும், வாகன இறக்குமதியில் சில சிக்கல்கள் இருந்தன.

வாகன இறக்குமதிக்கான கடிதம் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல் | Vehicle Import Ship For Sl Departs From Japan

ஆனால் இப்போது அந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன. அதன்படி, கடன் கடிதங்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான பிரச்சினைகள் 80 முதல் 90 சதவீதம் வரை தீர்க்கக்கூடிய நிலையை எட்டியுள்ளது.

இந்த நிலையில், வாகன இறக்குமதி வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டுள்ளது, அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

அத்துடன், ஜப்பான், ஐரோப்பா, தாய்லாந்து, துபாய் போன்ற இடங்களிலிருந்து கப்பல்களில் வரும் வாகனங்களை, இலங்கைக்கு வந்த பிறகு, வாகனத்தையும் விலையையும் சரிபார்த்த பிறகு நுகர்வோர் வாங்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கான மகிழ்ச்சி அறிவித்தல்

குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கான மகிழ்ச்சி அறிவித்தல்

இலங்கை வங்கிகளிடமிருந்து கடன் கடிதங்கள்

இருப்பினும் மக்கள், எந்தவொரு சூழ்நிலையிலும் வாகனங்களுக்கு யாருக்கும் பணம் செலுத்த வேண்டாம், இலங்கைக்கு வந்த பிறகு வாகனங்களை ஆய்வு செய்து வாங்குமாறு நுகர்வோரை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வாகன இறக்குமதிக்கான கடிதம் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல் | Vehicle Import Ship For Sl Departs From Japan

இதற்கிடையில், ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள வங்கிகள் இலங்கையின் சிறந்த வங்கிகளுடன் எந்த பிரச்சனையும் இல்லாமல் பரிவர்த்தனை செய்யத் தொடங்கியுள்ளன.

சுமிடோமோ மிட்சுய் உள்ளிட்ட வங்கிகள் இலங்கை வங்கிகளிடமிருந்து கடன் கடிதங்களை ஏற்றுக்கொள்கின்றன என்றும் இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.

ஜப்பானுக்கு மட்டுமல்ல, தாய்லாந்து, துபாய் போன்ற நாடுகளுக்கும், ஐரோப்பாவில் உள்ள வங்கிகளுக்கும் கடன் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அங்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை என்றும் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஷானி அபேசேகர தலைமையில் தூசுதட்டப்படவுள்ள முக்கிய வழக்குகள்!

ஷானி அபேசேகர தலைமையில் தூசுதட்டப்படவுள்ள முக்கிய வழக்குகள்!

பெரியநீலாவணையில் மதுபானசாலை தொடர்பில் சுமந்திரன் கொடுத்த வாக்குறுதி

பெரியநீலாவணையில் மதுபானசாலை தொடர்பில் சுமந்திரன் கொடுத்த வாக்குறுதி

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW