வாகன இறக்குமதிக்கான அனுமதி தொடர்பில் அமைச்சின் அறிவிப்பு

Sri Lanka Economic Crisis Sri Lanka
By Fathima Jun 16, 2023 06:17 PM GMT
Fathima

Fathima

தற்போது நிலவும் பொருளாதார சூழ்நிலையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்க முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நாட்டின் தற்போதைய நிலைமையை ஆராய்ந்த பின்னரே வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் தீர்மானம் எடுக்கமுடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாகன இறக்குமதிக்கான அனுமதி தொடர்பில் அமைச்சின் அறிவிப்பு | Vehicle Import In Srilanka

எரிபொருள் கொள்வனவுக்காக 80 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்ட பின்னரும், அது அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

எனவே, அதிக அளவு டொலர்களை உள்ளடக்கிய வாகன இறக்குமதி போன்ற முடிவுகள் கடுமையான ஆய்வுகளுக்கு பின்னரே எடுக்கப்பட வேண்டும். இந்த நேரத்தில், அதிக அளவு அன்னிய நாணயக் கையிருப்பு ஒதுக்கப்பட வேண்டியிருப்பதைக் கருத்தில் கொண்டு வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.