வாகன இறக்குமதிக்கு படிப்படியாக அனுமதி: வெளியான தகவல்
நாட்டில் அடுத்த வருடம் முதல் வாகன இறக்குமதிக்கு படிப்படியாக அனுமதி வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இந்த முடிவு சுங்க வரி மூலம் அரசாங்க வருவாயை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வாகன இறக்குமதி
இந்தநிலையில், நாட்டின் வெளிநாட்டு கையிருப்புகளை ஆதரிப்பதற்காக வருமானம் அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், வாகனங்கள் மீதான சுங்க வரிகள் அரசாங்கத்திற்கு குறிப்பிடத்தக்க வருவாய் ஆதாரமாக இருப்பதால் வாகன இறக்குமதியை அனுமதிக்கும் அளவுக்கு நமது கையிருப்பு வளர்ந்துள்ளதாக தான் நம்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |