வாகன இறக்குமதி தடை குறித்து மத்திய வங்கி ஆளுநர் கூறியுள்ள விடயம்
கடந்த அரசாங்கம் வாகன இறக்குமதித் தடையை படிப்படியாக நீக்குவதற்கு வழிவகுத்த நிதி நிலைமைகள் அரசாங்க மாற்றத்திற்குப் பின்னரும் மாறாமல் இருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், முந்தைய அரசாங்கம் முடிவெடுத்தபோது, தேவையான தொழிநுட்ப பகுப்பாய்வுகளை நடத்திய பின்னர் மத்திய வங்கி பரிந்துரைகளை வழங்கியது.
தனியார் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடு
2025 பெப்ரவரி முதலாம் திகதிக்குள் தனியார் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்துவதற்கான திட்டங்களை முந்தைய அரசாங்கம் அறிவித்திருந்தது.
நிதி நிலைமைகள் எதிர்பார்த்த பாதையில் தொடருமானால், தீர்மானத்தை தக்கவைத்துக்கொள்வது சாத்தியமாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், வாகன இறக்குமதி தொடர்பான இறுதி முடிவு நிதியமைச்சகத்தினுடையது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |