இலங்கையில் வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

Sri Lanka Economic Crisis Government Of Sri Lanka Japan vehicle imports sri lanka
By Mayuri Jun 30, 2024 02:58 AM GMT
Mayuri

Mayuri

நோயாளர் காவு வண்டி, குப்பை சேகரிக்கும் பாரவூர்திகள், தொழில்துறை மற்றும் கட்டுமானத்திற்குத் தேவையான தொழிற்சாலை வாகனங்கள் போன்ற நாட்டின் மிக அத்தியாவசிய சேவைகளுக்கு தேவையான வாகனங்களை எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் இறக்குமதி செய்ய அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

விசேட தேவைகள் கருதி இந்த வாகனங்கள் அவ்வப்போது சிறிய அளவில் இறக்குமதி செய்யப்படுவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாகன இறக்குமதி குறித்த அரசாங்கத்தின் திட்டம்

எவ்வாறாயினும், கார்கள், வான்கள், கெப் ரக வாகனங்கள் போன்ற தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பை அடுத்த ஆண்டு (2025) வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இலங்கையில் வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல் | Vehicle Import In Sri Lanka

அதன்படி, முதலில் 1000க்கும் குறைவான என்ஜின் திறன் கொண்ட வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு வட்டாரங்களை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வாகன இறக்குமதியாளர்களின் கருத்து

இதேவேளை வாகன இறக்குமதியாளர்களின் கூற்றுப்படி, “வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதித்தாலும் தற்போதைய சந்தை விலையில் வாகனங்களை விற்க முடியாது.

ஜப்பானில் 20 இலட்சம் ரூபாய்க்கு விற்கப்படும் காரை அனைத்து வரிகளுடன் குறைந்தது 60 இலட்சம் ரூபாய்க்கு விற்க வேண்டும்.

இலங்கையில் வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல் | Vehicle Import In Sri Lanka

எவ்வாறாயினும், வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை வழங்குவதற்கான கால அவகாசம் தொடர்பில் அரசாங்கம் இதுவரை வாகன இறக்குமதியாளர்களுக்கு அறிவிக்கவில்லை.

எனினும் வாகனங்களுக்கு 300 வீத வரி விதிக்குமாறு சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது” என குறிப்பிட்டுள்ளனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW