இலங்கையில் வாகன இறக்குமதி தடை நீக்கப்படுமா..!

Ranjith Siyambalapitiya Sri Lanka
By Mayuri Apr 20, 2023 06:50 AM GMT
Mayuri

Mayuri

இலங்கையில் வாகன இறக்குமதி தடையை நீக்கம் தொடர்பில் தற்போது புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.

இறக்குமதி தடையை நீக்குவது தொடர்பான சில செய்திகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகியிருந்தது.

அதன்படி இறக்குமதி தடைக்கு உட்பட்டிருந்த சில பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்திருந்தார்.

வாகன இறக்குமதி தடை நீக்கப்படுமா?

இந்த சூழ்நிலையில் வாகன இறக்குமதிக்கான தடையும் நீக்கப்படுமா என பல தரப்பினரும் வினவி வருகின்றனர்.

இலங்கையில் வாகன இறக்குமதி தடை நீக்கப்படுமா..! | Vehicle Import Ban In Sri Lanka

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சின் பேச்சாளரொருவர் கூறுகையில், ஏற்கனவே சொல்லப்பட்டது போல வாகன இறக்குமதிக்கான அனுமதி பல தரப்பினராலும் கோரப்பட்டாலும் கூட அதற்கான வாய்ப்புகள் தற்போது குறைவாக இருக்கிறது.

எதிர்வரும் ஓராண்டு காலத்திற்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. ஆனால் சில சில சலுகைகள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.