நாட்டில் மோட்டார் வாகன விலை மீண்டும் அதிகரிப்பு

Dollar to Sri Lankan Rupee Sri Lanka Economic Crisis Electric Vehicle Economy of Sri Lanka
By Fathima Sep 05, 2023 08:43 AM GMT
Fathima

Fathima

இலங்கையின் உள்நாட்டு சந்தையில் மோட்டார் வாகனங்களின் விலைகள் மீண்டும் அதிகரித்து செல்வதாக வாகன விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அரசாங்கம் அண்மையில் பொதுப் போக்குவரத்து மற்றும் சரக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

எனினும் சாதாரண மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் இன்னமும் வழங்கவில்லை.

நாட்டில் மோட்டார் வாகன விலை மீண்டும் அதிகரிப்பு | Vehical Price Incerese In Srilanka

வாகனங்களின் விலை அதிகரிப்பு

இந்த நிலையினால் நாட்டில் மீண்டும் வாகனங்களின் விலை அதிகரித்துச் செல்லும் போக்கினை அவதானிக்க முடிவதாக வாகன விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, உள்நாட்டில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் விலைகள் தொடர்ச்சியாக உயர்வடைந்து செல்வதாகவும் இது மேலும் உயர்வடையும் சாத்தியங்கள் காணப்படுவதாகவும் வாகன விற்பனையாளர் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் காரணத்தால் இலங்கைக்கான இறக்குமதிகள் முற்றாக தடைப்பட்டிருந்தன. இருப்பினும், முற்றாக முடக்கப்பட்டிருந்த இறக்குமதி தடைகளை அரசாங்கம் தற்போது தளர்த்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.