மரக்கறிகளின் விலை! இன்றைய விலை நிலவரம்
நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் மழையினால் மரக்கறிகளின் விலையில் சற்று ஏற்றத்தாழ்வு பதிவாகியுள்ளன.
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் அறிக்கையின் படி, ஒரு கிலோகிராம் கறிமிளகாய் 600 ரூபாய் முதல் 650 ரூபாய்க்கும், ஒரு கிலோகிராம்ஒரு கிலோகிராம் கரட் 120 ரூபாய் முதல் 140 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய விலை நிலவரம்
இதேவேளை தக்காளி 300 ரூபாய் முதல் 400 ரூபாய்க்கு இடைப்பட்ட விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், ஒரு கிலோகிராம் கரட் 120 ரூபாய் முதல் 140 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒருகிலோகிராம் 220 முதல் 240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு கிலோகிராம் லீக்ஸ் 70 ரூபாய் முதல் 100 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோகிராம் 140 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.