மரக்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Money Vegetables Vegetables Price Vegetable Price Today
By Rakshana MA Feb 11, 2025 12:30 PM GMT
Rakshana MA

Rakshana MA

அனைத்து மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நுவரெலியா, பண்டாரவளை போன்ற பகுதிகளில் இருந்து மரக்கறிகளின் கொள்வனவுகள் குறைவடைந்துள்ளதாலே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இதற்கமைய, நோகோல் தவிர அனைத்து மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளன.

வீழ்ச்சியடையும் டொலர் பெறுமதி!

வீழ்ச்சியடையும் டொலர் பெறுமதி!

விலையுயர்வு 

அதன்படி, மரக்கறிகளின் விலையில் அதிகபட்சமாக ஒரு கிலோ கரட்டின் விலை 72 சதவீதத்தை எட்டியுள்ளது.   

மரக்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Vegetable Prices In Sri Lanka

தொடர்ந்து, ஒரு கிலோ முட்டைக்கோஸின் விலை 63 சதவீதம், லீக்ஸ், முள்ளங்கி, பீட்ரூட் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றின் விலை 10 முதல் 21 சதவீதம் வரையும் அதிகரித்துள்ளது.

அத்துடன், ஒரு கிலோ கறி மிளகாயின் விலையும் 22 சதவீதம் அதிகரித்துள்ள அதே நேரத்தில் ஒரு கிலோ தக்காளியின் விலை 33 சதவீதம் குறைந்துள்ளது.

அதேவேளை, வெற்றிலையின் விலையும் 32 சதவீதம் அதிகரித்துள்ளதுடன் பச்சை மிளகாயின் விலை 22 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காற்றின் தரம் தொடர்பில் வெளியான தகவல்கள்

காற்றின் தரம் தொடர்பில் வெளியான தகவல்கள்

மின்வெட்டு நேரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

மின்வெட்டு நேரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW