யாழ்ப்பாணத்தில் 3000 ரூபாவை தொட்ட முருங்கக்காய் விலை
நாடு முழுவதும் உள்ள வர்த்தக நிலையங்களில் மரக்கறிகளின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.
அந்த வகையில், யாழ்ப்பாண வாரச்சந்தையில் ஒரு கிலோ கிராம் முருங்கைக்காயின் சில்லறை விலை 3,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.
தைப் பொங்கல் பண்டிகையையொட்டி முருங்கைக்காய்க்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளமையே விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மரக்கறிகளின் விலை உயர்வு
இந்த நாட்களில் முருங்கை அறுவடை கிடைக்காததாலும், ஏனைய வகை மரக்கறிகளின் விலை உயர்வு முருங்கைக்காய் விலை அதிகரிப்பிற்கு காரணம் என யாழ்ப்பாண மரக்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விலைகளின்படி யாழ்ப்பாணத்தில் முருங்கைக்காய் ஒன்றின் விலை 1,000 ரூபாவாகும். யாழ்ப்பாணத்தில் ஒரு கிலோ கிராம் முருங்கைக்காயின் மொத்த விலை 2,500 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் கனடாவில் புகலிடம் கோருவதில் சிக்கல் : மூத்த ஊடகவியலாளர்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |