வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பூசாரி மற்றும் ஆலயநிர்வாக உறுப்பினர் கைது
Vavuniya
Sri Lanka
By Nafeel
வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரியார் மற்றும் ஆலயநிர்வாக உறுப்பினர் ஒருவர் நெடுங்கேணி பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வெடுக்குநாறிமலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த இறை விக்கிரகங்கள் உடைக்கப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விக்கிரகங்கள் மீண்டும் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்தது. சங்காபிஷேக நிகழ்வு இதனையடுத்து ஆலயத்தில் பூஜை நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்ததுடன் நேற்றயதினம் சங்காபிஷேக நிகழ்வு இடம்பெற்றது.
கைது செய்யப்பட்டவர்கள் இன்று (11) வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.